உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கோடை மழையில் சாய்ந்த நெற்பயிர்

கோடை மழையில் சாய்ந்த நெற்பயிர்

சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே அறுவடை நேரத்தில் பெய்த மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து வீணாகின.இத்தாலுகாவில் பிரான்மலை, கிருங்காக்கோட்டை, வேங்கைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் கோடை நெல் சாகுபடி செய்துஇருந்தனர். பயிர் விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் கிருங்காக்கோட்டை உள்ளிட்ட சில இடங்களில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர் தரையில் சாய்ந்துவிட்டன. விவசாயிகள் கவலையில் உள்ளனர். மாணிக்கம், விவசாயி, அல்லிக்களம்: இரண்டு மாதத்துக்கு முன்பு கோடை மழையை எதிர்பார்த்து மகேந்திர வகை நெல்லை விதைத்தோம். இன்னும் 20 நாட்களில் அறுவடைக்கு தயாராகும் நிலையில் இருந்தது. காற்றோடு பெய்த மழையால் பெரும்பாலான பயிர் சாய்ந்துவிட்டது. இனி இயந்திரத்தை கொண்டு அறுவை செய்ய முடியாது. கூலியாட்களும் கிடைப்பதில்லை, அப்படியே கிடைத்தாலும் கூலி கொடுத்து கட்டிப்படியாகவில்லை. இப்போதே மண்ணில் சாய்ந்த பயிர்கள் முளைக்கதொடங்கிவிட்டது. முளைத்து விட்டால் எதற்கும் பயன்படாது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு தர வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை