உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கை மருத்துவமனையில் நோயாளியான ‛லிப்ட்கள்

சிவகங்கை மருத்துவமனையில் நோயாளியான ‛லிப்ட்கள்

சிவகங்கை, : சிவகங்கை அரசு மருத்துவமனையில் 'லிப்ட்' கள்சேதமானதால், டாக்டர் மற்றும் நோயாளிகள் அவதிக்குள்ளாகின்றனர். இங்கு, தரைதளம் முதல் 3 தளங்கள் வரை உள்ளன. மேல் தளங்களில் உள்ள நோயாளிகள் பிரிவுக்கு செல்ல டாக்டர், நோயாளிகளுக்கு வசதியாக 7 இடங்களில் 'லிப்ட்' வசதி செய்து தந்துள்ளனர். இதில் சில லிப்ட்கள் மட்டுமே இயங்குகிறது. குறிப்பாக நோயாளிகளுக்கான உணவு, மருந்து பொருட்கள் கொண்டு செல்ல பயன்படுத்தும் லிப்ட் பழுதடைந்துஉள்ளது. சில லிப்ட்களின் கதவுகள் சேதமடைந்துஉள்ளன. சேதமான மற்றும் செயல்படாத லிப்ட்களை செப்பனிட்டு, பயன்பாட்டிற்கு கொண்டு வர மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ