உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஓய்வூதியர்கள்செயற்குழு கூட்டம்

ஓய்வூதியர்கள்செயற்குழு கூட்டம்

சிவகங்கை: காரைக்குடியில் ஊரக வளர்ச்சித்துறை ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடந்தது.மாநில தலைவர் மணிவண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் பொன்துரைசிங்கம் வரவேற்றார். பொது செயலாளர் முத்தையா, பொருளாளர் இந்திரஜித், மாநில நிர்வாகிகள் செந்தில்வேல், பழனியாண்டி, பாண்டுரங்கன், முத்தலீப், கண்ணன், கந்தசாமி, துரைராஜ், சுப்புலட்சுமி, மாவட்ட நிர்வாகிகள் ஆறுமுகம், நசீராபேகம் பங்கேற்றனர். 70 வயதிற்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு சட்டசபை தேர்தலின் போது அளித்த வாக்குறுதிபடி 10 சதவீதம் கூடுதல் பென்ஷன் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றினர். பென்ஷனர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. மாவட்ட செயலாளர் முத்துமாடன், பொருளாளர் குணசேகரன் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை