உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மின் மோட்டார் பழுதால் குடிநீருக்கு அலையும் மக்கள்

மின் மோட்டார் பழுதால் குடிநீருக்கு அலையும் மக்கள்

பழையனூர்: பழையனூர் அருகே வல்லாரேந்தல் கிராமத்தில் மின் மோட்டார் பழுது சரி செய்யப்படாததால் பத்து நாட்களுக்கும் மேலாக குடிநீருக்காக கிராம மக்கள் குடத்துடன் அலைந்து வருகின்றனர்.வல்லாரேந்தல் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கிராம மக்களின் குடிநீர் பயன்பாட்டிற்காக கிருதுமால் நதி கரையை ஒட்டி ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. கிராம மக்களின் தாகம் தீர்த்த ஆழ்துளை கிணற்றில் கடந்த பத்து நாட்களுக்கு முன் மோட்டார் பழுதானது இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தும் இன்று வரை சரி செய்யப்படாதது மட்டுமல்ல அதிகாரிகள் யாரும் எட்டி கூட பார்க்கவில்லை. ஏற்கனவே கடும் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் கிணறுகள், ஆழ்துளை கிணறுகளிலும் நீர்மட்டம் வெகு வாக குறைந்து வரும் நிலையில் மோட்டார் பழுதை கூட அதிகாரிகள் சரி செய்யாததால் கிராமமக்கள் ஆண்களும், பெண்களும் குடத்துடன் அலைந்து வருகின்றனர். வறட்சி மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது போல இப்பகுதி கிராமமக்களும் ஒரே சமயத்தில் 3 முதல் 8 குடங்கள் வைக்கும்படி உள்ள தள்ளுவண்டிகள் வாங்கி அருகில் உள்ள மற்ற கிராமங்களுக்கு சென்று குடிநீர் எடுத்து வருகின்றனர். கொளுத்தும் வெயிலில் குடிநீருக்காக கிராமமக்கள் அலைவது வேதனையை ஏற்படுத்தியுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மோட்டாரை சரி செய்து குடிநீர் விநியோகத்தை சீர்படுத்த வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை