உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / போலீஸ் செய்திகள் :திருவிழா கூட்டத்தில் மோதல் * 7 பேர் மீது வழக்கு

போலீஸ் செய்திகள் :திருவிழா கூட்டத்தில் மோதல் * 7 பேர் மீது வழக்கு

திருவிழா கூட்டத்தில் மோதல் * 7 பேர் மீது வழக்கு

திருப்பாச்சேத்தி:திருப்பாச்சேத்தி அருகே பச்சேரியில் கோயில் திருவிழா நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக 7 பேர் மீது திருப்பாச்சேத்தி போலீசார் வழக்கு பதிந்தனர். திருப்பாச்சேத்தி அருகே பச்சேரியில் வைகாசி விசாக திருவிழா நடத்துவது தொடர்பாக கிராம ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் ஒலி பெருக்கி அமைப்பது சம்பந்தமாக இரு தரப்பினர் மோதிக்கொண்டனர். இது குறித்து அழகர் புகாரின்படி ரமேஷ், ஊர்க்காவலன், அய்யனார், சசிகுமார் ஆகிய 4 பேர் மீதும், ரமேஷ் புகாரின்படி அழகர், சந்திரன், கொங்கேஸ்வரன் ஆகிய 3 பேர் என 7 பேர் மீது திருப்பாச்சேத்தி போலீசார் வழக்கு பதிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ