உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரை சோனையா கோயிலில் பொங்கல் விழா

மானாமதுரை சோனையா கோயிலில் பொங்கல் விழா

மானாமதுரை, : மானாமதுரை நகராட்சி அலுவலகம் அருகே உள்ள நிரதலமுடைய அய்யனார் சோனையா சுவாமி கோயிலில் ஆடி 2வது வெள்ளியை முன்னிட்டு சிவகுலத்தோர் சமுதாய மக்களின் சார்பில் பொங்கல் பூஜை விழா நடைபெற்றது. சுவாமிகளுக்கு பால், பன்னீர், சந்தனம், குங்குமம், இளநீர், திரவியம் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.இதனைத் தொடர்ந்து சுவாமிகளுக்கு அபிஷேக, ஆராதனை நடைபெற்றன. விநாயகர் கோயிலிலிருந்து பூஜை பொருட்களை ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்து பொங்கல் வைத்து சுவாமியை வழிபட்டனர். இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ