உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / குப்பை மேடான பூச்சியேந்தல் ஊருணி

குப்பை மேடான பூச்சியேந்தல் ஊருணி

இளையான்குடி : இளையான்குடி அருகே புதுார் பூச்சியேந்தலில் உள்ள ஊருணியில் குப்பை, மது பாட்டில்களை போடுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதோடு நீரின் சுவையும் மாறுபடுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இளையான்குடி பேரூராட்சிக்குட்பட்ட புதுார் பூச்சியேந்தல் பகுதி ஊருணியில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மக்கள் குப்பை,கழிவு பொருட்களை கொட்டி வருகின்றனர். பலர் ஊரணிக்குள் மது அருந்திவிட்டு மதுபாட்டில்களை அங்கேயே போட்டு வருகின்றனர்.தற்போது ஊரணியில் தண்ணீர் இல்லாத காரணத்தினால் ஊருணிக்குள் எங்கு பார்த்தாலும் குப்பை,மது பாட்டிலாக காட்சியளிக்கிறது. மேலும் இந்த ஊருணிக்கான மழை நீர்வரத்து பாதைகளும் அடைபட்டு போனதால் ஊரணிக்குள் தண்ணீர் வராமல் உள்ளது. இந்த ஊருணியில் தண்ணீர் நிரம்பினால் சுற்றுவட்டார பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து தண்ணீரின் சுவையும் மாறும். பேரூராட்சி நிர்வாகத்தினர் இந்த ஊருணியில் குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை