உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கோடை மழையால் பசுமையாகிய பிரான்மலை

கோடை மழையால் பசுமையாகிய பிரான்மலை

சிங்கம்புணரி: சிங்கம்புணரி பிரான்மலை, எஸ்.புதுார் ஒன்றியத்தில் மலைக்குன்றுகளில் இருந்த மரங்கள் கோடை வெயில் காரணமாக இலை கொட்டி காயும் தருவாயில் இருந்தன. கடந்த ஒரு மாதமாக பெய்த கோடை மழை காரணமாக அனைத்து மரங்களும் மீண்டும் துளிர்த்து பசுமையாக உள்ளது. மலைத்தொடர் முழுவதும் பச்சை போர்வை போர்த்தியது போல் கண்களுக்கு ரம்மியமாக காட்சியளிக்கிறது. மேலும் மலைப்பாதை வழியாக செல்லும் போது குளிர்ந்த காற்றும் இதமான சூழலும் நிலவுகிறது. இதை அனுபவிப்பதற்காக பல்வேறு ஊர்களில் இருந்து இளைஞர்கள் சுற்றுலாப் பயணிகள் டூவீலர்களில் மலைத் தொடர்களை வலம் வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ