| ADDED : மே 09, 2024 05:21 AM
சிவகங்கை: தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்ட செயற்குழு கூட்டம் காளையார்கோவிலில் மாவட்ட தலைவர் புரட்சித்தம்பி தலைமையில் நடந்தது.மாநில துணைத் தலைவர் ஆரோக்கியராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் முத்துப்பாண்டியன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சகாய தைனேஸ் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார்.மாவட்ட பொருளாளர் கலைச்செல்வி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் குமரேசன், சிங்கராயர்,ரவி, மாவட்ட துணை தலைவர் சேவியர் சத்தியநாதன், மாவட்ட துணை செயலாளர்கள் பஞ்சு ராஜ், கஸ்துாரி, கல்வி மாவட்ட தலைவர்கள் ஜோசப், ஜான் கென்னடி, கல்வி மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான டிட்டோஜாக் ஆசிரியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அரசாணை 243ஐ எதிர்த்து போராட்ட நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அரசாணையை ரத்து செய்வதாக உறுதி அளித்தார்.ஆனால் தற்போது வெளியிடப்பட்ட பொதுமாறுதல் கலந்தாய்வு அமைச்சரின் அறிவிப்புக்கு முரணாக உள்ளது. எனவே தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பை ரத்து செய்து பழைய நடைமுறைப்படி ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும்.புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முழுமையான செலவு தொகை வழங்க மறுப்பதை கண்டித்தும், ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை மென்பொருளில் உள்ள குளறுபடிகளை களைய கோரி வருகிற ஜூன் 13 அன்று மாவட்ட தலைநகரங்களில் உள்ள மாவட்ட கருவூல அலுவலகம் முன்பும், அடுத்த கட்டமாக ஜூலை 17ம் தேதி சென்னையிலும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.