உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தலைமையாசிரியர்கள் தவிப்பு

தலைமையாசிரியர்கள் தவிப்பு

சிவகங்கை:ஓய்வு பெறும் தலைமை ஆசிரியர்களுக்கு தணிக்கையாளர்கள் தணிக்கை செய்யாததால் ஓய்வூதியம் உள்ளிட்ட பணப்பலன் பெற முடியாமல் தவிக்கின்றனர்.தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி செய்யும் தலைமை ஆசிரியர் பலர் மே 31ல் பணி நிறைவு பெறுகின்றனர்.பணி நிறைவு பெறுவோரில் பலருக்கு மாநில கணக்காயர் அலுவலகம் (ஏ.ஜி., அலுவலகம்) மூலம் பண பலன்கள் மற்றும் ஓய்வூதியம் அனுமதித்து ஆணை வழங்கப்பட்டு விட்டது. ஆணை கிடைத்தும் பண பலன் பெறமுடியாத சூழல் உள்ளது.ஓய்வு பெறுவதற்கு முன் தணிக்கை முடிந்த பின்னரே அனுமதி அளிக்க வேண்டும் என கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் தணிக்கையாளர்கள் வராததால் ஓய்வூதியம் மற்றும் பண பலன் பெற முடியாத சூழல் உள்ளதாக தலைமை ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.தேசிய நல்லாசிரியர் கண்ணப்பன் கூறுகையில், தணிக்கையாளர்கள் வராததால் ஓய்வூதியம், பணப்பலன் பெற முடியாத சூழல் உள்ளது. தமிழக முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை