பொது குறைதீர் கூட்டம்
சிவகங்கை: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா, சமூக திட்ட உதவி தொகை, புதிய ரேஷன் கார்டு கோரி 278 பேர் மனுக்களை அளித்தனர். இம்மனுக்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு கலெக்டர் பரிந்துரை செய்தார்.