| ADDED : ஜூலை 16, 2024 11:16 PM
காரைக்குடி : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அரசு போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று பல மணி நேரம் ரெய்டு நடத்தினர்.காரைக்குடியில் திருச்சி ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு புதிய வாகனங்கள் பதிவு, லைசென்ஸ் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இங்கு வருபவர்களிடம் அலுவலக ஊழியர்கள் புரோக்கர்கள் மூலம் அதிக பணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. நேற்று இந்த அலுவலகத்தில் டி.எஸ்.பி., ஜான் பிரிட்டோ தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், ஜேசுதாஸ், கண்ணன், எஸ்.ஐ., ராஜா முகமது உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். மோட்டார் வாகன ஆய்வாளர் சித்ரா மற்றும் அதிகாரிகள், புரோக்கர்களிடம் விசாரணை நடத்தினர். கணக்கில் வராத ரூ.91 ஆயிரத்து 800 கைப்பற்றப்பட்டது.