உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காருக்குள் சிக்கிய குழந்தை மீட்பு

காருக்குள் சிக்கிய குழந்தை மீட்பு

மானாமதுரை:சிவகங்கை மாவட்டம் தாயமங்கலத்தில் கதவுகள் மூடப்பட்ட நிலையில் காருக்குள் சிக்கித்தவித்த ஒன்றரை வயது பெண் குழந்தையை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா மார்ச் 28 ல் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான நேற்று பொங்கல் விழா நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர்.சிவகங்கைமாவட்டம் நெற்குப்பை பகுதியைச் சேர்ந்த கண்ணன் குடும்பத்தினருடன் காரில் கோயிலுக்கு வந்திருந்தார். காரை கோயிலுக்கு அருகிலேயே நிறுத்தினார். மற்றவர்கள் வெளியில் நின்றனர். அவரது ஒன்றரை வயது பெண் குழந்தை ,காரில் டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்தது. கார் சாவியும் உள்ளே இருந்த நிலையில் அனைத்து கதவுகளும் தானாக மூடிக்கொண்டதால் காருக்குள் சிக்கித்தவித்தது. தீயணைப்புத்துறை மாவட்ட உதவி அலுவலர் நாகராஜன், மானாமதுரை நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையிலான வீரர்கள் காரின் கதவை லாவகமாக திறந்து குழந்தையை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ