உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நெற்குப்பையில் சாலை மறியல்

நெற்குப்பையில் சாலை மறியல்

நெற்குப்பை : திருப்புத்துார் ஒன்றியம் நெற்குப்பை மாணிக்க நாச்சியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் இரு தரப்பினருக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சாலை மறியல் நடந்தது.இக்கோயிலில் நேற்று நடந்த கும்பாபிஷேகத்தில் மரியாதை அளிப்பதில் ஒரே சமூகத்தினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அப்பகுதி ரோட்டில் சாலை மறியல் செய்து ஒரு தரப்பினர் அதிருப்தி தெரிவித்தனர் . தாசில்தார் மாணிக்கவாசகம், டி.எஸ்.பி. ஆத்மநாதன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். 3 மணி நேரத்திற்கு பின்னர் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை