உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அரசு வேலை தருவதாக ரூ.9.56 லட்சம் மோசடி

அரசு வேலை தருவதாக ரூ.9.56 லட்சம் மோசடி

சிவகங்கை,:வேலை வாங்கித் தருவதாக, தற்காலிக பேராசிரியரிடம், 9.56 லட்சம் ரூபாய் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே நடுவலசையைச் சேர்ந்தவர் ராஜூ, 44; தேனி அரசு கலைக்கல்லுாரியில் தற்காலிக பேராசிரியர். இவரிடம், இளையான்குடி கலைக்குளத்தைச் சேர்ந்த இளங்கோவன், 41, அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, 2023 டிச., 8ல், 9 லட்சத்து 56,870 ரூபாய் வாங்கியுள்ளார். வேலை வாங்கித் தராததால், பணத்தை திரும்ப கேட்ட ராஜூவை இளங்கோவன் மிரட்டியுள்ளார். ராஜூ புகாரின்படி, இளையான்குடி போலீசார் இளங்கோவனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ