உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஸத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை விழா இன்று துவக்கம்

ஸத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை விழா இன்று துவக்கம்

மானாமதுரை : மானாமதுரையில் ஸத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் 44வது ஆண்டு ஆராதனை விழா இன்று துவங்கி நாளை 17ம் தேதி முடிவடைகிறது.கர்நாடக இசை கலைஞர்களின் குருவாக போற்றப்படும் ஸத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் ஜீவ சமாதி மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் அமைந்துஉள்ளது. வருடம் தோறும் இங்கு ஆராதனை விழா தொடர்ந்து 2 நாட்கள் நடைபெறும். விழாவின் போது ஏராளமான கர்நாடக இசை கலைஞர்கள் இசை அஞ்சலி செலுத்துவர். இந்த ஆண்டுக்கான ஆராதனை விழா இன்றும், நாளையும் நடக்கிறது.ஆராதனை விழாவில்குரு அஞ்சலி, உஞ்சவ்விருத்தி, கோஷ்டி கானம், விக்னேஸ்வர, வடுக, கன்யா சுவாசினி, தம்பதி பூஜை, இசை நிகழ்ச்சி, சொற்பொழிவு, பாராட்டு விழாக்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சி நடைபெற உள்ளன.ஏற்பாடுகளை சத்குருசதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை குழு டிரஸ்டிகள் ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ், ஸ்ரீவித்யா ராஜகோபாலன்,ஸ்ரீதரன் ,ஸ்ரீராமன், கிளீவ்லேண்ட் சுந்தரம், முரளி உள்ளிட்ட பலர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ