உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தேர்தல் எதிரொலியால் ரூபாய் நோட்டுகளுக்கு தட்டுப்பாடு

தேர்தல் எதிரொலியால் ரூபாய் நோட்டுகளுக்கு தட்டுப்பாடு

திருப்புவனம், : தமிழகம் முழுவதும் லோக்சபா தேர்தல் பிரசாரம் களை கட்டியுள்ள நிலையில் 100, 200 ரூபாய் நோட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் ஏற்பாடு நடந்து வருகின்றன. தமிழகத்தில் முதல் கட்டமாக வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வேட்பாளர்கள் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். பிரசாரத்திற்கு வேட்பாளர்கள் வர உள்ள நிலையில் உள்ளுர் நிர்வாகிகள் மூலம் கட்சிகாரர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அழைத்து வரப்படுகின்றனர். இவர்களுக்கு நபர் ஒருவருக்கு 200 ரூபாய் வழங்கப்படுகிறது. ஆரத்தி எடுக்க ஐம்பது ரூபாய் வழங்கப்பட்ட நிலையில் சில இடங்களில் ஐம்பது ரூபாய் வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு நிலவுவதால் நுாறு ரூபாய் வழங்கப்படுகிறது. இதனால் வங்கிகள், பெரிய கடைகளில் 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை அரசியல் கட்சி பிரமுகர்கள் மொத்தமாக வாங்கி செல்வதால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ