உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காளையார்கோவிலில் ஜூலை 24ல் உங்களை தேடி உங்கள் ஊரில் முகாம்

காளையார்கோவிலில் ஜூலை 24ல் உங்களை தேடி உங்கள் ஊரில் முகாம்

சிவகங்கை : காளையார்கோவில் தாலுகாவில் ஜூலை 24 அன்று உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெறும்.ஜூலை 18 முதல் 20 வரை மனுக்களை வழங்கலாம் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார். அவர் கூறியதாவது: இத்திட்டத்தின் கீழ் கலெக்டர் மற்றும் பிற மாவட்ட அதிகாரிகள் காளையார்கோவில் தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்களில் கள ஆய்வு செய்து, மக்களின் குறைகள் நிவர்த்தி செய்து தரப்படும். மேலும் அரசின் நலத்திட்டங்கள் வழங்கப்படும். இந்த முகாம் ஜூலை 24 அன்று காளையார்கோவில் தாலுகாவில் நடைபெறும். இத்தாலுகாவிற்கு உட்பட்ட மக்கள் நாட்டரசன்கோட்டை பேரூராட்சி, கிராம ஊராட்சிகள், வி.ஏ.ஓ., அலுவலகங்களில் ஜூலை 18 முதல் 20 வரை மனுக்களை பதிவு செய்து பயன்பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை