உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கையில் சாய பட்டாணி பறிமுதல்

சிவகங்கையில் சாய பட்டாணி பறிமுதல்

சிவகங்கை: சிவகங்கை வாரச்சந்தையில் நேற்று உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு செய்ததில், தடை செய்யப்பட்ட பச்சை சாயமேற்றப்பட்ட பட்டாணி விற்பனை செய்ததை கண்டறிந்தனர்.சிவகங்கையில் நேற்று வாரச்சந்தை நடைபெற்றது. ரோட்டோரத்தில் கடைகள் அமைத்து காய்கறி, உள்ளிட்ட பொருட்களை வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். நேற்று நடந்த சந்தையில் விற்கப்பட்ட பச்சை பட்டாணி பச்சை சாயம் பூசியிருப்பதை மக்கள் கண்டறிந்தனர். இது குறித்து உணவு பாதுகாப்பு அலுவலருக்கு புகார் செய்தனர்.சிவகங்கை அலுவலர் சரவணக்குமார் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் வாரச்சந்தையில் பச்சை பட்டாணி விற்பனை செய்த கடைகளில் சோதனை செய்தனர். பச்சை பட்டாணியை வாங்கி தண்ணீரில் போட்டதும் சாயம் வெளியேறியது. அவற்றை பறிமுதல் செய்தனர். இந்த பட்டாணியை விற்பனை செய்த மூவருக்கு தலா ரூ.1,000 அபராதம் விதித்து, 40 கிலோ பட்டாணியை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி