உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சேவுக பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி விழா கொடியேற்றம்

சேவுக பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி விழா கொடியேற்றம்

சிங்கம்புணரி : சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயிலில் நேற்று கொடியேற்றத்துடன் வைகாசி விசாக திருவிழா துவங்கியது.சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் வைகாசி விசாக திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக மே 2ஆம் தேதி கோயில் உற்சவ விநாயகர் சிங்கம்புணரி கிராமத்தில் எழுந்தருளினார். அங்கு பத்து நாள் வழிபாட்டுக்கு பிறகு நேற்று காலை புறப்பட்டு மீண்டும் கோவிலுக்கு வந்தார். நேற்று மதியம் 2:30 மணிக்கு சுவாமிக்கு காப்புக் கட்டப்பட்டு கோயில் கொடிமரத்தில் கொடியேற்றம் நடந்தது. பத்து நாள் திருவிழாவாக ஒவ்வொரு நாளும் சுவாமி வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது. மே 16 ல் சேவுகப்பெருமாளுக்கு திருக்கல்யாணம், மே 17 ல் கழுவன் திருவிழா, மே 21 ல் பூப்பல்லக்கு, மே 30ல் தேரோட்டமும் நடைபெறும். சிங்கம்புணரி கிராமத்தினர், தேவஸ்தான நிர்வாகிகள் ஏற்பாட்டைசெய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை