மேலும் செய்திகள்
குலாலர் பிள்ளையார் கோவில் கும்பாபிேஷகம் கோலாகலம்
09-Sep-2024
காரைக்குடி; காரைக்குடி, செக்காலை சிவன் கோயிலில் கும்பாபிேஷகம் நடந்தது. இங்கு செப்., 4 ல் அனுக்கை, விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமத்துடன் கும்பாபிேஷக விழா தொடங்கியது. செப். 5 ல் பிரசன்னாபிஷேகம், தான்யஸ்தாபனம், வாஸ்து சாந்தி, முதல் கால பூஜை நடந்தது. இரண்டு, மூன்று மற்றும் நான்காம் கால பூஜைகள் ஐந்தாம் கால பூஜையும் தீபாராதனை நிகழ்ச்சியும் நடந்தது.முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. நேற்று அதிகாலை ஆறாம் கால பூஜை, கோ பூஜை, மகா பூர்ணாகுதி நடந்தது. தொடர்ந்து விமானம் மற்றும் மூலஸ்தான கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். மாலையில் திருக்கல்யாணமும், இரவு 7.30 மணிக்கு பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடந்தது.
09-Sep-2024