| ADDED : ஜூன் 13, 2024 05:51 AM
சிவகங்கை: அரசு துவக்கப்பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையால் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாகஆசிரியர்கள் கவலைதெரிவிக்கின்றனர்.அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பிலிருந்து 12 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வியில் 7.5 சதவீத ஒதுக்கீடு என்பது பெற்றோர்களுக்கு அரசுப் பள்ளிகளில் மாணவர்களைசேர்க்கும் எண்ணத்தை அதிகரிக்க வைத்துள்ளது.இந்த ஆர்வம் நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளுக்குத்தான். துவக்கப் பள்ளிகளை பொறுத்தவரை இன்றும் பெற்றோர்கள் விரும்புவது தனியார் பிரைமரி, நர்சரி பள்ளிகளைத்தான்.குறிப்பாக கிராமங்களில் இதை கவுரவப் பிரச்னையாகவே கருதுகின்றனர். இதனால் கிராமங்களில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகளில் புதியமாணவர் சேர்க்கைஅதிகரிப்பதில்லை.பெற்றோர் ஆர்வமின்மைக்கு காரணம் அரசு துவக்க பள்ளிகளில்ஆசிரியர் பற்றாக்குறை தான்.5 வகுப்பு கொண்ட துவக்கப்பள்ளிகளுக்கு 2 ஆசிரியர்கள் தான் உள்ளனர். 1முதல் 3 ம் வகுப்பு வரை ஒருவரும், 4,5 ம் வகுப்புகளுக்கு மற்றொருவரும் பாடம் எடுக்கின்றனர். ஒருவர் விடுமுறை என்றால் மற்ற வகுப்புகளை எப்படி நடத்த முடியும். குறைந்தது 30 லிருந்து அதிகபட்சமாக 60 மாணவர்கள் வரை இருக்கும் இந்த பள்ளிகளுக்கு மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் 2 ஆசிரியர்கள் போதும் என்று அரசு நினைக்கிறது.இதனால் பாடங்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர்கள் இல்லை. இங்கு உடற்கல்விக்கு,ஓவியத்திற்கு ஆசிரியர்களே கிடையாது. இந்த வயதில் இவர்கள் விளையாடாமல், ஓவியம் கற்காமல் எப்போது கற்க முடியும்.குறைவான மாணவர்களுடன் படிக்க மாணவர்களும் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் துவக்கப் பள்ளிகளில் மாணவர்களின் கல்வித்தரமும் பாதிக்கப்படுவதாக ஆசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.