உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அரசு தோட்டக்கலை பண்ணையில் சிங்கப்பூர் செர்ரி பழச்செடி

அரசு தோட்டக்கலை பண்ணையில் சிங்கப்பூர் செர்ரி பழச்செடி

பூவந்தி : பூவந்தி அருகே கிளாதரியில் அரசு தோட்டக்கலைப்பண்ணையில் முதன் முதலாக சிங்கப்பூர் செர்ரி பழ செடியை வளர்த்துள்ளனர்.அரசு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் கிளாதரியில் அரசு தோட்டக்கலைப்பண்ணை செயல்பட்டு வருகிறது.10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்களை வளர்த்து வரும் பண்ணையில் சிங்கப்பூர் செர்ரி மரத்தை வளர்த்து சாதனை படைத்துள்ளனர்.மெக்சிகோ நாட்டை பூர்வீகமாக கொண்ட இந்த மரம் சுமார் ஐந்து அடி முதல் 21 அடி உயரம் வரை வளரக்கூடியது.கோடை காலத்திலும் வறட்சியை தாண்டி வளரக்கூடிய இந்த மரம் அடர்த்தியான கிளைகளை கொண்டது.கிளாதரி அரசு தோட்டகலைப் பண்ணையில் 15க்கும் மேற்பட்ட சிங்கப்பூர் செர்ரி பழ செடிகள் வைக்கப்பட்டுள்ள நிலையில் நான்கு செடிகள் மரங்களாக வளர்ந்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ