உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாநில இறகு பந்து போட்டி சிவகங்கை மாணவி முதலிடம்

மாநில இறகு பந்து போட்டி சிவகங்கை மாணவி முதலிடம்

சிவகங்கை - தமிழ்நாடு இறகுப்பந்து கழகம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட இறகுப்பந்து கழகம் இணைந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாநில சப்-ஜூனியர் தரவரிசை இறகுப்பந்து போட்டியை நடத்தியது.17 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவில் மாநிலம் முழுவதும் இருந்து வீராங்கனைகள் பங்கேற்றனர்.சிவகங்கை மாவட்டம் சார்பில் பங்கேற்ற காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவி ராஜராஜேஸ்வரி மற்றும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மோக்ஷிதா- ஜோடி சிறப்பாக விளையாடினார்.இறுதிப்போட்டியில் 21--16, 17--21, 21--15 என்ற செட் கணக்கில் முதலிடம் பெற்றார். முதலிடம் பெற்ற ராஜராஜேஸ்வரி தமிழ்நாடு இறகு பந்து கழகத்தின் சார்பாக சான்றிதழ், பதக்கம் வழங்கப்பட்டது.மாணவிக்கு சிவகங்கை மாவட்ட இறகுப்பந்து கழக தலைவர் ராமகிருஷ்ணன், செயலாளர் டி.எஸ். பாரூக், காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் பள்ளி தாளாளர் ஆர்.கே.சேதுராமன், நிர்வாக இயக்குனர் அஜய் உக்தேஷ், பயிற்சியாளர் பகவதி ராஜா, பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ