உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மழை வேண்டி சிறப்பு தொழுகை

மழை வேண்டி சிறப்பு தொழுகை

சிவகங்கை : சிவகங்கை, திருப்புவனத்தில் மழை வேண்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறப்பு தொழுகை நடத்தினர். மாவட்ட தலைவர் ரபீக் முகமது தலைமை வகித்தார். பொருளாளர் முகமது இஸ்மாயில் முன்னிலை வகித்தார். துணை செயலாளர் சிகாபுதீன், மாணவரணி செயலாளர் வரிசை முகுமது, கிளை தலைவர் ஷாஜகான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.திருப்புவனம்: மழை வேண்டி திருப்புவனம் புதுாரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கிளை தலைவர் தீன் முகமது தலைமையில் சிறப்பு தொழுகை நடந்தது. பேச்சாளர் இஸ்மாயில் துவக்கி வைத்தார். இயற்கையை அவரவர் விரும்பும் வகையில் வேண்டி மழை பெய்து விவசாயம் செழிக்கவும், குடிநீர் பிரச்சனை தீரவும் இந்த சிறப்பு தொழுகை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ