| ADDED : மே 09, 2024 05:28 AM
திருப்புத்துார்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்புத்துார் கிளை சார்பில் அச்சுக்கட்டுப் பகுதி தவ்ஹீத் பள்ளிவாசல்எதிரே உள்ள வளாகத்தில் இஸ்லாமியர்கள் மழை வேண்டி நபிவழி மழைத் தொழுகை என்ற சிறப்புத் தொழுகையை நடத்தினர். ஏப். முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில்மக்கள் கோடை வெயிலை சமாளிக்க முடியாத அளவுக்கு வெப்பம்வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது. நீர் நிலைகள் அனைத்தும் வற்றி, கடுமையான வறட்சி நிலவி வருகிறது. கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபட வேண்டியும், மழை பெய்து நீர்நிலைகள் நிரம்பி பசுமையான சூழ்நிலை உருவாக வேண்டியும் தொழுகை நடந்தது. அபுபக்கர் சித்திக் தலைமையில் நடந்த இந்த தொழுகையில், இஸ்லாமியர்கள் பங்கேற்று இறைவனை வழிபட்டனர். ஏற்பாட்டினை தலைவர் அப்பாஸ், செயலாளர் சுல்தான், பொருளாளர் அபுபக்கர்சித்திக் செய்தனர்.