உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புவனத்தில் துர்நாற்றம் வீசும் கண்மாய்கள் சுகாதாரம் காக்குமா நிர்வாகம்

திருப்புவனத்தில் துர்நாற்றம் வீசும் கண்மாய்கள் சுகாதாரம் காக்குமா நிர்வாகம்

திருப்புவனம்: திருப்புவனம் வட்டாரத்தில் கடும் கோடை வெயில் காரணமாக கண்மாய்கள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் வறண்ட நிலையில் மீன்களும் செத்து மிதப்பதால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார கேடும் நிலவி வருகிறது.திருப்புவனம் வட்டாரத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் திருப்புவனம், பழையனூர், ராங்கியம் உள்ளிட்ட இடங்களில் கண்மாய்கள் உள்ளன. வைகை ஆற்றில் இருந்து நீர் திறக்கப்படும் காலங்களில் கண்மாய்களுக்கும் தண்ணீர் கொண்டு வரப்பட்டு விவசாயம் நடைபெறுகிறது. கண்மாயில் தண்ணீர் தேங்குவதால் சுற்றுவட்டார கிணறுகளிலும் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயரும், இந்தாண்டு பிப்ரவரி முதல் கடும் கோடை வெயில் காரணமாக கண்மாய்களில் தண்ணீர் வெகுவாக ஆவியாகி வருகிறது. கோடையிலும் மழை இல்லாத நிலையில் கண்மாய்கள் உள்ள தண்ணீரும் ஆவியாகி வருவதால் கண்மாய் தண்ணீர் எளிதில் சூடேறி விடுகிறது. கண்மாயில் உள்ள மீன்கள் வெப்பம் தாங்காமல் இறந்துவிடுகின்றன. வெப்பம் தாங்காமல் கரைக்கு வரும் மீன்களும் உயிரிழந்து வருகின்றன. இதனால் கண்மாய்களில் உயிரிழந்த மீன்கள் குவித்து வைக்கப்பட்டு காய்ந்து கருவாடாக மாறி வருகிறது. மீன்கள் செத்து மிதப்பதால் கண்மாய் தண்ணீரும் துர்நாற்றம் வீசி பயன்படுத்த முடியாத அளவிற்கு சுகாதார கேடும் நிலவி வருகிறது. கேரளாவில் நிபா வைரஸ்க்கு சிறுவன் உயிரிழந்த நிலையில் அம்மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. துர்நாற்றம் வீசும் நீர் நிலைகள் மூலமாக வைரஸ் பரவி காய்ச்சல் உள்ளிட்டவைகள் ஏற்படுவதாக சுகாதார துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.கேரளாவில் நீர் நிலைகளில் குதிப்பது, குளிப்பது போன்றவற்றை செய்ய கூடாது, அதிலும் சிறுவர், சிறுமிகள் குளங்கள் உள்ளிட்டவற்றில் குளிப்பதால் மூக்கு வழியாக வைரஸ் பரவுவதாக தெரிவித்துள்ளனர். திருப்புவனம் அருகே ராங்கியன் கண்மாய் தண்ணீர் கடும் துர்நாற்றம் வீசியதுடன், மீன்களும் செத்து கரை ஒதுங்கியுள்ளன. இதில் மாணவர்கள் உட்பட பலரும் இறங்கி குளிப்பதுடன் மீன்களும் பிடித்து வருகின்றனர். அதிகாரிகள், சுகாதார துறையினர் கண்காணிப்பு இல்லாததால் தினமும் 10க்கும் மேற்பட்டோர் மீன் பிடித்து விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விபரீதம் ஏற்படும் முன் கண்மாய் தண்ணீரை அகற்றி கண்மாயை தூர் வார வேண்டும். திருப்புவனம் ஒன்றியத்தில் உள்ள பல்வேறு கண்மாய்களில் தண்ணீர் குறைந்த நிலையில் மீன்கள் செத்து மிதக்கின்றன. செப்டம்பரில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் பொதுப்பணித்துறை முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை