உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஆண்டுக்கு 15,564 பேரை தெருநாய்கள் கடிக்கிறது நடமாட முடியாத அச்சம்

ஆண்டுக்கு 15,564 பேரை தெருநாய்கள் கடிக்கிறது நடமாட முடியாத அச்சம்

சிவகங்கை:சிவகங்கை மாவட்டத்தில், கடந்த ஆண்டு 15,564 பேர்களை தெருநாய்கள் கடித்ததில், இருவர் பலியாகினர். தெரு நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சத்தில் தவிக்கின்றனர். இம்மாவட்டத்தில் தெருநாய்கள் வளர்ச்சியை உள்ளாட்சி நிர்வாகம் கட்டுக்குள் கொண்டு வரவில்லை. இதனால், தெரு நாய்கள் அதிகரித்து ரோட்டில் செல்வோரை விரட்டி கடிக்கிறது. தினமும் 10 பேர் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வருகின்றனர். கடந்த 2022ல் 16,683 பேர் நாய்கடிக்கு உள்ளாகினர். இதில், 2 பேர் பலியாகினர். அதேபோன்று 2023 ல் 15,564 பேர்களை நாய்கள் கடித்ததில், அந்த ஆண்டும் 2 பேர் பலியாகினர். தெருநாய்கள் கடித்து உரிய நேரத்தில் சிகிச்சை பெறாவிடில், ரேபிஸ் நோய் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை