உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வாகன ஓட்டிகளை விரட்டும் தெருநாய்கள்

வாகன ஓட்டிகளை விரட்டும் தெருநாய்கள்

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் டூவீலர்களில் செல்வோரை தெருநாய்கள் விரட்டி கடிப்பதால் வாகன ஓட்டிகள் ஓட்டம் பிடிக்கின்றனர்.இப்பேரூராட்சியில் 18 வார்டுகளிலும் ஏராளமான தெருநாய்கள் திரிகின்றன. பலர் நாய்கடியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தவோ, பிடித்து அப்புறப்படுத்தவோ எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் காரைக்குடி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான நாய்கள் அவ்வழியாக டூவீலரில் செல்வோரை விரட்டி கடிக்க முயல்கின்றன. இதனால் மக்கள் அலறி ஓட்டம் பிடிக்கின்றனர் சிலர் விழுந்து காயமடைவது தொடர்கிறது. வாகனப் போக்குவரத்து அதிகம் உள்ள சாலை என்பதால் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நகரில் சுற்றித் திரியும் தெருநாய்களை பிடித்து பராமரிப்பு முகாம்களில் அடைக்க வேண்டும், மேலும் அனைத்து நாய்களுக்கும் கருத்தடை ஊசி போட்டு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை