உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானிய நெல் விதை இருப்பு; உதவி இயக்குனர் தகவல்

மானிய நெல் விதை இருப்பு; உதவி இயக்குனர் தகவல்

சிவகங்கை: ஆடியில் விதைக்க ஏதுவாக வேளாண்மை விரிவாக்க மையத்தில் நெல் விதைகள் இருப்பு உள்ளது என சிவகங்கை உதவி இயக்குனர் வளர்மதி தெரிவித்தார்.அவர் கூறியதாவது: ஆடி பட்டத்திற்கான மழை பெய்து வருகிறது. இக்கால கட்டத்தில் நெல் விதைப்பிற்கு ஏதுவாக, சிவகங்கை வேளாண்மை விரிவாக்க மையம், மதகுபட்டி துணை மையத்தில் ஜெ.ஜி.எல்., 1798, என்.எல்.ஆர்., 34449, சி051 ரக நெல் விதைகள் இருப்பு உள்ளன. 50 சதவீத மானியத்தில் திரவ உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் (நெல்), இதரம், பாஸ்போபாக்டீரியா, திரவ பொட்டாஷ், பாக்டீரியா மற்றும் நெல், பயறு, சிறுதானிய, நிலக்கடலை நுண்ணுாட்டம் இருப்பு உள்ளது. இந்த இடுபொருட்களை மானியத்தில் பெற்று விவசாயிகள் பயன்பெறலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ