உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ரேஷனுக்கு வந்த தரமற்ற துவரம் பருப்பு திரும்பியது; மே மாத ஒதுக்கீடே வழங்க முடியாமல் சிக்கல்

ரேஷனுக்கு வந்த தரமற்ற துவரம் பருப்பு திரும்பியது; மே மாத ஒதுக்கீடே வழங்க முடியாமல் சிக்கல்

சிவகங்கை : சிவகங்கையில் ரேஷன் கடைகளுக்கு வழங்க ஒதுக்கீடு செய்த 128 டன் துவரம் பருப்பு தரமற்று இருந்ததால், அவற்றை நுகர்பொருள் வாணிப கழகம் திருப்பி அனுப்பியது.மாவட்ட அளவில் உள்ள 829 ரேஷன் கடை மூலம் 3.66 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு மானிய விலையில் துவரம் பருப்பு,சர்க்கரை,பாமாயில்,கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வினியோகம் செய்து வருகின்றனர்.குறிப்பாக துவரம் பருப்பு கிலோ ரூ.30, பாமாயில் ஒரு கிலோ பாக்கெட் ரூ.25 க்கு வழங்கப்படுகிறது. இதற்காக கார்டுதாரர்களுக்கு வழங்க மாதந்தோறும் 3.78 லட்சம் பாக்கெட் பாமாயில், 384 டன் துவரம் பருப்பு நுகர்பொருள் வாணிப கழக கோடவுனில் இருந்து அந்தந்த ரேஷன் கடைகளுக்கான ஒதுக்கீட்டை வழங்கி வருகின்றனர்.மே மாதத்திற்கான பாமாயில், துவரம் பருப்பு ஒதுக்கீடு முழுமையாக வந்து சேரவில்லை. இதையடுத்து தொடர்ந்து தினமலரில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, முதற்கட்டமாக பாமாயில் பாக்கெட்கள் திருப்புவனம் தவிர்த்து அந்தந்த ரேஷன் கடைகளுக்கு வழங்கப்பட்டு விட்டன.திருப்புவனத்திற்கு படிப்படியாக அனுப்பி வருகின்றனர். அதே நேரம் துவரம் பருப்பு இன்னும் 160 டன் வரை ரேஷன் கடைகளுக்கு மே மாத ஒதுக்கீடாக வழங்க வேண்டும். ஆனால், தொடர்ந்து தரமற்ற துவரம் பருப்பு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு வருவதால், அவற்றை ரேஷன் கடைகளுக்கு அனுப்பாமல், திருப்பி அனுப்பி வருகின்றனர்.இதனால், பெரும்பாலான ரேஷன் கடைகளுக்கான மே மாத ஒதுக்கீடான துவரம் பருப்பு முழுமையாக சென்று சேர வில்லை. இந்நிலையில் ஜூன் பிறந்து 12 நாட்கள் ஆன நிலையில், இந்த மாதத்திற்கான துவரம் பருப்பு, பாமாயில் ஒதுக்கீடும் வந்து சேரவில்லை என ரேஷன் கார்டுதாரர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

திரும்பி சென்ற 128 டன் பருப்பு

வழங்கல் துறை அதிகாரி கூறியதாவது: அரசு டெண்டர் ஒப்பந்தபடி தரமான துவரம் பருப்பை தான் ரேஷன் கடைகளுக்கு வழங்க வேண்டும். ஆனால், தொடர்ந்து தரமான துவரம் பருப்பு வராமல், கனடாவில் இருந்து வரும் மஞ்சள் நிற பருப்பு, பட்டாணி கலந்த பருப்பு என தரமற்றவைகளை வழங்கி வருகின்றனர். இது போன்ற பருப்புகளை திருப்பி அனுப்ப, உணவு பொருள் வழங்கல் துறை உத்தரவிட்டதால், இது வரை இம்மாவட்டத்தில் இருந்து 128 டன் தரமற்ற துவரம் பருப்பு திரும்ப அனுப்பப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை