உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கையில் மே 7 முதல் கோடை கொண்டாட்டம்

சிவகங்கையில் மே 7 முதல் கோடை கொண்டாட்டம்

சிவகங்கை: சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில் மே 7 முதல் 17 வரை மாணவர்களுக்கு கோடை கொண்டாட்டம் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.இம்மாவட்டத்தில் நடப்பு கல்வி ஆண்டில் ஒன்று முதல் 8 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கோடை கொண்டாட்டம் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இப்பயிற்சி முகாமில் இசை, ஓவியம், செஸ், கையெழுத்து பயிற்சி, ஆங்கில பேச்சு, திருக்குறள் ஒப்பிவித்தல் பயிற்சி, மண்பாண்ட கலை, கைவினை பயிற்சிகள் வழங்கப்படும். இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் மே 6 அன்று மாலை 6:00 மணிக்குள் https://shorturl.at/mxDJR இணையதள முகவரியில் மாணவர் விபரங்களை பதிவு செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு 83001 95044ல் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி