உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கையில் கோடை விழா

சிவகங்கையில் கோடை விழா

சிவகங்கை, : சிவகங்கை நகராட்சி, கவுரீஸ்வரி அமிஸ்மண்ட் இணைந்து கலெக்டர் வளாக மருது பாண்டியர் பூங்காவில் கோடை விழாவை ஜூன் 7 - 17 வரை நடத்துகிறது.காலை 11:00 முதல் இரவு 9:00 மணி வரை நடைபெற உள்ளது. நுழைவு கட்டணம் இலவசம். ஜூன் 7 பாரதி இசை கல்விக் கழகம் வழங்கும் நிகழ்ச்சி, ஜூன் 8 லண்டன் கிட்ஸ் மழலையர் பள்ளி மேஜிக் ேஷா, ஜூன் 9 அதீபன் நாட்டியாலயா நிகழ்ச்சி, ஜூன் 10 சாம்பவிகா பள்ளி நடன நிகழ்ச்சி, ஜூன் 11 ஸ்ரீ ஆருத்ரா நாட்டிய பள்ளி நிகழ்ச்சி, ஜூன் 12 மாஸ்கோ உடற்பயிற்சி நிலையம் சிலம்பாட்டம், உடற்பயிற்சி, ஜூன் 13 பண்ணை மாரிவேணி குளோபல் பள்ளி கலை நிகழ்ச்சி, ஜூன்14 ரமணவிகாஸ் பள்ளி நடன நிகழ்ச்சி, ஜூன் 15 ஸ்ரீ அன்னை வீரமாகாளி அம்மன் பள்ளி நடன நிகழ்ச்சி, ஜூன் 16 மவுண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகன்ட்ரி சிபிஎஸ்இ பள்ளி நடன நிகழ்ச்சி, ஜூன் 17 ஆஸ்கார் எம்ஆர்கே கலைக்கூடம் பல்சுவை நிகழ்ச்சி நடக்கிறது. நிறைவு நாளன்று மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ