உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கோடை கால ஹாக்கி; 180 பேர் பயிற்சி

கோடை கால ஹாக்கி; 180 பேர் பயிற்சி

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைந்த ஹாக்கி கழகம் சார்பில் ஒரு மாதம் நடத்தப்பட்ட கோடை கால ஹாக்கி இலவசப் பயிற்சி முகாமில் 180 மாணவர்கள்பயிற்சி பெற்றனர்.மாவட்ட ஒருங்கிணைந்த ஹாக்கி கழகம் சார்பில்சிவகங்கை மாவட்ட விளையாட்டு மைதானம், ஜஸ்டின் பள்ளி, சுவாமி விவேகானந்தா பள்ளி, காரைக்குடி அழகப்பா மாதிரி பள்ளி உட்பட 4 பள்ளிகளில் பயிற்சி முகாம் நடத்தப்பட்டன. இப்பயிற்சியில் 4ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் 100 மாணவர்களும், 80 மாணவிகளும் பயிற்சி பெற்றனர்.நிறைவு விழாவிற்கு தேசிய நல்லாசிரியர் கண்ணப்பன் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைந்த ஹாக்கி கழக செயலர் தியாகபூமி வரவேற்றார். பள்ளி நிர்வாகி சங்கரன் முன்னிலை வகித்தனர். உடற்கல்வி ஆசிரியர் ஓய்வு சின்னையா, மகளிர்ஹாக்கி பொறுப்பாளர் அழகுமீனாள் தேவதாஸ், அருண் பேசினர். மாவட்டத்தலைவர் கார்த்திகைசாமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்