உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஆசிரியர் சங்க செயற்குழு கூட்டம்

ஆசிரியர் சங்க செயற்குழு கூட்டம்

சிவகங்கை |: தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் புரட்சித்தம்பி தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் முத்துப்பாண்டியன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சகாயதைனேஸ் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார். மாவட்ட பொருளாளர் கலைச்செல்வி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சிங்கராயர், ரவி, மாவட்ட துணை தலைவர்கள் ஜீவா ஆனந்தி, சேவியர் சத்தியநாதன், அமலசேவியர், துணை செயலாளர்கள் கஸ்துாரி, பஞ்சுராஜ், தேவகோட்டை கல்வி மாவட்ட தலைவர் ஜோசப், சிவகங்கை கல்வி மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தமிழகத்தில் தொடக்கக்கல்வி துறையில் பணியாற்றும்90 சதவீத ஆசிரியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அரசாணை 243 ரத்து செய்தல் உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 29, 30, 31 அன்று சென்னையில் டிட்டோஜாக் சார்பில் நடைபெற உள்ள முற்றுகை போராட்டத்தில் சிவகங்கை மாவட்டம் சார்பில் தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஜூலை 31 அன்று பங்கேற்பது என தீர்மானிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி