உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஆசிரியர் சங்கம் போராட்டம்

ஆசிரியர் சங்கம் போராட்டம்

சிவகங்கை : சிவகங்கையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லுாரி ஆசிரியர் நலச் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். மாவட்டத் தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். வட்டச் செயலாளர் ஜோசப் இருதயம் வரவேற்றார். மாநில பொதுக்குழு உறுப்பினர் சுசிலாதேவி முன்னிலை வகித்தார். மாநிலப் பொதுச்செயலாளர் பர்வதராஜன் துவக்கி வைத்து பேசினார். மாவட்டச் செயலாளர் முத்துச்சாமி, மாவட்டத் தலைவர் வடிவேலு கோரிக்கையை விளக்கி பேசினர். போராட்டத்தில் ஓய்வூதியர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சையை அனைத்து நோய்களுக்கும் உறுதிப்படுத்திட வேண்டும். சிகிச்சை செலவை குறைத்து வழங்கும் காப்பீட்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. மாவட்ட பொருளாளர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ