உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தென்மாப்பட்டு மஞ்சுவிரட்டு 250 காளைகள் பங்கேற்பு

தென்மாப்பட்டு மஞ்சுவிரட்டு 250 காளைகள் பங்கேற்பு

திருப்புத்தூர் : திருப்புத்தூர் தென்மாப்பட்டு ஆதினமிளகி அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு நடந்த மஞ்சுவிரட்டில் 250க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. நேற்று முன்தினம் புரவி எடுப்பு நிறைவை முன்னிட்டு நேற்று காலை சாமி அழைக்கப்பட்டு தொழுவிற்கு வந்தனர்.தொடர்ந்து காலை 10:15 மணிக்கு கோயில்காளை உள்ளிட்ட காளைகள் சம்பிரதாயமாக அவிழ்க்கப்பட்டது. பின்னர் அவிழ்க்கப்பட்ட காளைளை பிடிக்க முயன்றதில் இருவர் மட்டும் லேசான காயம் அடைந்தனர். சுமார் 250க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.வயல்களில் கட்டு மாடுகளும் அவிழ்க்கப்பட்டன. அனுமதியில்லாமல் மஞ்சுவிரட்டு நடத்தியது குறித்து திருப்புத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ