உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இளைஞரை வீடு புகுந்து  தாக்க முயன்றவர்கள் கைது

இளைஞரை வீடு புகுந்து  தாக்க முயன்றவர்கள் கைது

சிவகங்கை : சிவகங்கையில் வீடு புகுந்து இளைஞரை தாக்க முயன்ற கும்பலை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை மஜீத் ரோடு பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் மகன் சிவகார்த்திகேயன் 23. இவருக்கு சிவகங்கையில் சில இளைஞர்களுடன் முன்விரோதம் இருந்துள்ளது. இவரை தொண்டி ரோட்டை சேர்ந்த அருண் பாண்டி 22, அரசனேரி கீழமேடு பகுதியை சேர்ந்த நித்தீஸ்வரன் 21, புதுப்பட்டி மதன் சக்தி, முதீஸ்வரன், சோழபுரம் விஜய் 19, மஜித் ரோடு ஜெயசுப்பு 23, செந்தமிழ் நகர் கேசவராஜ் 20, மீனாட்சி நகர் பிரதீப், ஒக்கூர் பிரேம் 20, லலித் உள்ளிட்டோர் வீடு புகுந்து தாக்க முயன்றுள்ளனர். சிவகார்த்திகேயன் அப்பா கோபிநாத் நகர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் அருண்பாண்டி, நித்தீஸ்வரன், விஜய், ஜெயசுப்பு, கேசவராஜ், பிரதீப், பிரேம் உள்ளிட்டோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை