உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருத்தளிநாதர் கோயில் ஆனி திருமஞ்சனம்

திருத்தளிநாதர் கோயில் ஆனி திருமஞ்சனம்

திருப்புத்துார், : திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் நடராஜருக்கு ஆனி திருமஞ்சனம் நடந்தது. குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயில் தென்சிதம்பரம் என்று அழைக்கப்பட்டது. இறைவன் இறைவிக்கு கவுரி தாண்டவம் நிகழ்ச்சிஸ்தலமாகும். இதனால் இங்கு ஆனி திருமஞ்சனம் ஆண்டு தோறும் நடைபெறும். மாலை 6:00 மணிக்கு உற்ஸவ நடராஜர், மூலவர் சன்னதியில் எழுந்தருளினார். தொடர்ந்து ரமேஷ் குருக்கள் தலைமையில் சிவாச்சார்யார்கள் சிறப்பு பூஜை நடத்தி, பல வித திரவியங்களால் உற்ஸவருக்கு சிறப்பு அபிேஷகம் செய்தனர்.தொடர்ந்து அலங்காரத்தில் எழுந்தருளிய உற்ஸவருக்கும், மூலவருக்கும் சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர் உற்ஸவர் பிரகாரம் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ