உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கீழடி விவசாயிகளுக்கு பயிற்சி

கீழடி விவசாயிகளுக்கு பயிற்சி

கீழடி : கீழடியில் வேளாண் துறை அட்மா விரிவாக்க திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான இடுபொருள் உற்பத்தி குறித்த பயிற்சி முகாம் நடந்தது. உதவி அலுவலர் கலைவாணி வேளாண் திட்டங்கள், மண்வள பாதுகாப்பு குறித்து விளக்கமளித்தார்.வேளாண் ஆலோசகர் குணசேகரன் பஞ்சகவ்யம், ஜீவாமிர்தம் உற்பத்தி குறித்த உயர் தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தார். துணை வேளாண் அலுவலர் முனுசாமி கோடை உழவு சாகுபடி, இயற்கை விவசாயம் குறித்த ஆலோசனைகளை வழங்கினார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் சத்யா அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயிற்சிகள், செயல் திட்டங்கள் குறித்து எடுத்தரைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி