உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / போக்குவரத்து தொழிலாளர் கையெழுத்து இயக்கம்

போக்குவரத்து தொழிலாளர் கையெழுத்து இயக்கம்

காரைக்குடி ; காரைக்குடியில் ஏ.ஐ.டி.யு.சி., அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் சங்கம் சார்பில், போக்குவரத்து கழக தொழிலாளர்களிடம் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கையெழுத்து இயக்கம் நடந்தது.மண்டலத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மண்டல பொதுச்செயலாளர் விஜயசுந்தரம், பொருளாளர் பேரானந்தம் முன்னிலை வகித்தனர். மண்டல துணைச் செயலாளர் ரமேஷ் பாபு, காரைக்குடி கிளை பொருளாளர் அஜித்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஊதிய ஒப்பந்தம் அமல்படுத்த வேண்டிய 15 வது ஊதிய ஒப்பந்தம், காலிப்பணியிடத்திற்கு நேரடி நியமனம் அவசியம், பழைய பஸ்களை கழித்துவிட்டு, புதிய பஸ்களை இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ