உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பராமரிப்பில்லாத ஏந்தல் ரோடு 10 கிராம மக்கள் அவதி

பராமரிப்பில்லாத ஏந்தல் ரோடு 10 கிராம மக்கள் அவதி

இளையான்குடி: இளையான்குடி தாயமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட ஏந்தல் கலைக்குளம் செல்லும் ரோடு குண்டும் குழியுமாக இருப்பதால் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.தாயமங்கலத்திலிருந்து ஏந்தல்,கலைக்குளம் வழியாக சொக்கனேந்தல்,பாச்சட்டி,ஓடைக்குளம், இரும்பூர் , பெரியகண்ணனுார் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த ரோட்டை பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரோடு அமைக்கப்பட்டு 10ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டதால் எங்கு பார்த்தாலும் குண்டும், குழியுமாக இருப்பதால் அவசர காலங்களில் கூட மக்கள் டூவீலர், சைக்கிளில் செல்வதற்கு மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.தற்போது கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் ரோடுகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளதால் டூவீலர்களில் வருபவர்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர். மேலும் 108 ஆம்புலன்ஸ் மற்றும் ஆட்டோக்கள் வர மறுப்பதால் உடல் நலம் குன்றியவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட 10 கிராம மக்களின் அடிப்படை வசதியான ரோட்டை உடனடியாக சீரமைத்து தரவேண்டும் என கிராம மக்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை