உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பயன்பாட்டிற்கு வராத தானியங்கி மழைமானி

பயன்பாட்டிற்கு வராத தானியங்கி மழைமானி

திருப்புவனம் : திருப்புவனத்தில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி மழைமானி பயன்பாட்டிற்கு வராததால் மழை அளவை துல்லியமாக கணக்கிடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.திருப்புவனம் தாலுகா கடந்த 2013 ல் உதயமானது. திருப்புவனம் தாலுகாவில் மழை அளவை கணக்கிட அரசு மருத்துவமனை வளாகத்தில் மழை மானி அமைக்கப்பட்டுள்ளது.திருப்புவனத்தில் பெய்யும் மழை அளவை கணக்கிட மருத்துவமனை வளாகத்தில் உள்ள குடுவையில் சேர்ந்துள்ள மழை நீரை எடுத்து சென்று சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள குடுவையில் ஊற்றி கணக்கிட வேண்டும்.இதில் பல்வேறு நடைமுறை சிக்கல் இருந்த நிலையில் கடந்தாண்டு தமிழகத்தில் வருவாய் வட்டங்களில் தானியங்கி மழைமானி அமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி திருப்புவனம் வேளாண் அலுவலக வளாகத்தில் நவீன மழை மானி அமைக்கும் பணி கடந்த ஓராண்டாக நடந்து வருகிறது. கடந்த இரு மாதங்களுக்கு முன் பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று வரை அது பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை.அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள மழைமானி சேதமடைந்த நிலையில் அதனை சரி செய்து அதில் இருந்து மழை அளவை கணக்கிட்டு வருவாய்த்துறை வெளியிட்டு வருகிறது. திருப்புவனத்தில் பெய்யும் மழை அளவு மூலமாக வேளாண் திட்டங்கள் செயல்படுத்தப்படும், பெய்யும் மழை அளவிற்கு ஏற்றபடி விதை நெல், உரம், வேளான் கருவிகள் ஆகியவை இருப்பு வைக்க உதவும், சேதமடைந்த மழை மானியின் மூலம் துல்லியமாக கணக்கிடவே முடியவில்லை.அடுத்த மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் தானியங்கி மழைமானி பயன்பாட்டிற்கு வந்தால் தான் விவசாயிகள் அச்சமின்றி பணிகளை தொடங்க முடியும்.வருவாய்துறை அதிகாரிகள் கூறுகையில்: தமிழகம் முழுவதும் 25 கோடி ரூபாய் செலவில் ஒவ்வொரு வருவாய் கிராமத்திற்கும் மழை அளவை கணக்கிட தானியங்கி மழை மானி அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் தொடங்கின.திருப்புவனத்திலும் பணிகள் நிறைவு பெற்ற நிலையில் மற்ற பகுதிகளில் பணிகள் நிறைவடையாததால் இன்னமும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தியுள்ளோம், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ