உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரையில் புல்வெளியாக மாறிய வைகை

மானாமதுரையில் புல்வெளியாக மாறிய வைகை

மானாமதுரை, : மானாமதுரையில் நகர் பகுதியை பிரிக்கும் வகையில் நகருக்கு நடுவில் வைகை ஆறு செல்கிறது.ஒருபுறம் கீழ்கரை என்றும் மறுபுறம் மேல்கரை என்றும் அழைக்கப்படுகிறது.கடந்த 15 வருடங்களுக்கு முன்பு வைகை ஆற்றில் எங்கு பார்த்தாலும் மணல் பரப்பாக காட்சியளித்த நிலையில் மாலை நேரங்களில் பொதுமக்கள் வைகை ஆற்றில் அமர்ந்து பொழுதை கழித்தனர்.கடந்த சில ஆண்டுகளாக வைகை ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் வரத்து இல்லாததாலும்,தொடர் மணல் கொள்ளை காரணமாகவும் தற்போது வைகை ஆற்றில் நாணல் செடிகள், கருவேல மரங்கள் வளர்ந்து காணப்படுகிறது. நகர் பகுதி மட்டும் கட்டாந்தரையாக காட்சியளித்து வருகிறது.இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பகுதிகளுக்காக வைகை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டதன் காரணமாக தற்போது நகர பகுதி வைகை ஆற்றுக்குள் எங்கு பார்த்தாலும் புற்கள் முளைத்து பச்சை பசேலென மைதானம் போல காட்சி அளிக்கிறது. கால்நடை மேய்ப்பவர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் தங்களது கால்நடைகளை வைகை ஆற்றுக்குள் மேய்ச்சலுக்கு அழைத்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை