உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தட்டாண்குளம் தாண்டிய வைகை நீர்

தட்டாண்குளம் தாண்டிய வைகை நீர்

திருப்புவனம்: ராமநாதபுர மாவட்ட பெரிய கண்மாய்க்கு திறக்கப்பட்ட வைகை அணை தண்ணீர் நேற்று திருப்புவனம் தட்டான்குளம் தடுப்பணையை கடந்து சென்றது.வைகை அணையில் இருந்து கடந்த 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை ராமநாதபுர மாவட்ட பெரிய கண்மாய்க்கு மூவாயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. கடும் கோடை வெயில் காரணமாக வைகை ஆறு வறண்டதுடன் வைகை ஆற்றை நம்பியுள்ள ஆழ்துளை, திறந்த வெளி கிணறுகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்ததாலும், வைகை ஆற்றில் உள்ள கூட்டு குடிநீர் திட்ட கிணறுகளுக்காகவும் தண்ணீர் திறக்கப்பட்டது. நீண்ட காலமாக வைகை ஆற்றில் நீர் வரத்து இல்லாத நிலையில் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மதுரை மாவட்டப்பகுதியில் ஆற்றில் வளர்ந்திருந்த ஆகாயத்தாமரை செடிகள், சாக்கடைகள் என அனைத்தையும் சேர்த்து இழுத்து வந்தது. திருப்புவனம் அருகே தட்டான்குளம் தடுப்பணை முழுவதும் ஆகாயத்தாமரை நிரம்பி இருந்தன. தண்ணீரின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க ஆகாயத்தாமரை செடிகளையும் இழுத்து கொண்டு சென்றன. ராமநாதபுர மாவட்டத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் என்பதால் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து வரத்து கால்வாய்களின் ஷட்டர்களும் அடைக்கப்பட்டு ஆறு வழியாகவே தண்ணீர் சென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ