| ADDED : மே 16, 2024 06:22 AM
சிங்கம்புணரி : சதுர்வேதமங்கலத்தில்மீண்டும் வைகாசித் திருவிழா நடத்த கிராம மக்கள் ஒருமனதாக முடிவு செய்தனர். இங்குள்ள கூந்தலுடையஐயனார் கோயில் வைகாசித் திருவிழா 2019ல் நடந்தது. அதற்குப் பிறகு கொரோனா தடை மற்றும் சில பிரச்னைகளால் திருவிழா தடைபட்டது. இந்நிலையில் மீண்டும்திருவிழா நடத்த கிராம முக்கியஸ்தர் காந்தி தலைமையில் அனைத்து சமுதாய மக்களும் கூடி முடிவு செய்தனர். இதில் கூந்தலுடைய ஐயனார் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில் விழாக்களையும் தொடர்ந்து ஒற்றுமையுடன் நடத்துவது, சமுதாய ஒற்றுமைக்கு பொறுப்பாளர்களை நியமிப்பது, கோயில் விழாக்களில் ஆடல் பாடல், கச்சேரிகளுக்கு அனுமதிப்பதில்லை, அதற்கு பதிலாக நாடகம், பட்டிமன்றம் மட்டுமே நடத்துவது. உபயதாரர்கள் நிகழ்சிகளை கிராமத்தினரே தலைமை ஏற்று நடத்துவது, தனியார் விழாவாக இருந்தாலும் கிராமத்தினரின் அனுமதி பெற்று நடத்துவது என அனைவரும் ஒருமனதாக கூடி முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து மே 13ல் கோயிலில் காப்பு கட்டப்பட்டு திருவிழா தொடங்கியது. மே 20ம் தேதி ஐயனாருக்கு புரவி எடுப்பு, மது எடுப்பு நடக்கிறது. ஜூன் 2ம் தேதி எருது விட்டு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை சதுர்வேதமங்கலம் கிராமத்தினர் செய்து வருகின்றனர்.