| ADDED : மே 05, 2024 04:59 AM
சிவகங்கை : திருப்புவனம் அருகேயுள்ள மாங்குடி வி.ஏ.ஓ., அன்புச்செல்வன். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் மாங்குடி கிராம ஓட்டுச்சாவடியில் இரவு 10:00 மணிக்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்களையும் தேர்தல் ஆவணங்களையும் சேகரிப்பதற்கு மண்டல அலுவலர் குழு சென்றுள்ளது. அப்போது குழுவில் இடம் பெற்றிருந்த உதவி மண்டல அலுவலர் முத்து முருகன் என்பவருக்கும் வி.ஏ.ஓ., அன்புச்செல்வன் என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் அன்புச்செல்வனால், முத்து முருகன் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஓட்டுப்பதிவு இயந்திரங்களையும், தேர்தல் பொருட்களையும் மண்டல அலுவலர் குழு ஒன்றரை மணி நேரம் தாமதமாக எடுத்து சென்றுள்ளனர்.இது தொடர்பாக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கலெக்டர் ஆஷா அஜித்திடம் புகார் அளித்தனர். வருவாய் கோட்டாட்சியர்விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க கலெக்டர் உத்தரவிட்டார்.சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி கலெக்டரிடம் அறிக்கை சமர்ப்பித்தார். அந்த அறிக்கையின் பேரில் வி.ஏ.ஓ., அன்புச்செல்வனை தற்காலிகபணி நீக்கம் செய்து கலெக்டர் ஆஷா அஜித் உத்தரவிட்டுள்ளார்.