உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / 2 வாரத்தில் சேதமடைந்த ரோடு கிராம மக்கள் புகார்

2 வாரத்தில் சேதமடைந்த ரோடு கிராம மக்கள் புகார்

திருப்புவனம்: திருப்புவனம் அருகே வில்லியரேந்தல் கிராமத்திற்கு 16 லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட தார்ரோடு இரண்டு வாரத்தில் சேதமடைந்துள்ளது.திருப்புவனம் அருகே வில்லியரேந்தல் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். செல்லப்பனேந்தல் ஊராட்சியைச் சேர்ந்த இக்கிராமத்திற்கு பிரமனுார் ரோட்டில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட தார் ரோடு முற்றிலும் பெயர்ந்து வாகனங்கள் செல்ல முடியாமல் சேதமடைந்து இருந்தது. புதிய தார் ரோடு அமைக்க வேண்டும் என கிராம மக்கள் போராடினர். இதனையடுத்து முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 400 மீட்டர் துாரத்திற்கு 16 லட்ச ரூபாய் செலவில் தார் ரோடு அமைக்கும் பணி நடந்தது. பணிகள் நிறைவடைந்த நிலையில் பல இடங்களில் தார்ச்சாலை பெயர்ந்து சேதமடைந்துள்ளது. மழை ஏதும் பெய்யாத நிலையில் தார் ரோடு சேதமடைந்தது கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊராட்சி ஒன்றிய பொறியாளர் தேவிகா கூறுகையில் : இன்னமும் பணிகள் நிறைவடைய வில்லை. தார் ரோடு அமைத்ததற்கு பணம் இன்னமும் விடுவிக்கப்படவில்லை, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ