உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஊருணியை புனரமைக்க கிராமத்தினர் முடிவு

ஊருணியை புனரமைக்க கிராமத்தினர் முடிவு

திருப்புத்துார் : திருப்புத்துார் அருகே கண்டரமாணிக்கத்தில் நைனார்குண்டு ஊருணியை கிராமத்தினரே புனரமைக்க திட்டமிட்டுள்ளனர்.கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம் சிவன் கோயில் பகுதியில் உள்ளது நைனார்குண்டு ஊரணி. இந்த ஊரணியை முன்பு கிராமத்தினர் குடிநீருக்கு பயன்படுத்தினர். காலப்போக்கில் அது மறைந்து குளிக்க மட்டும் பயன்படுத்தி வந்தனர். பின்னர் மஞ்சுவிரட்டு தொழு அருகில் இருப்பதால், மஞ்சுவிரட்டுக்கு வந்தவர்கள் மட்டும் பயன்படுத்தினர்.தற்போது இந்த ஊரணி ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நீர்வரத்துக்கால்வாய் துார்ந்து விட்டன. இதனால் ஆக்கிரமிப்பிலிருந்து ஊருணியை மீட்டு ஊரணியை புனரமைக்க கிராமத்தினர்திட்டமிட்டுள்ளனர். ரூ. 90 லட்சம் மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதியுடன் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ஊரணியை புனரமைக்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி