மேலும் செய்திகள்
அறிவியல் தின விழா
15-Feb-2025
காரைக்குடி; காரைக்குடி அழகப்பா பல்கலையில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு வளர்ந்த இந்தியாவுக்கு அறிவியல் மற்றும் புதுமை கண்டுபிடிப்புகளில் இந்திய இளைஞர்களை உலகளாவிய தலைமைக்கு மேம்படுத்துதல் என்ற தலைப்பில் பார்வையாளர் தினம் நாளை நடைபெறுகிறது.இதில், 19 அறிவியல் துறையின் கீழ் அதிநவீன உபகரணங்கள் மற்றும் செயல்பாடு விளக்கம் அறிவியல் சோதனை விளக்கம் மற்றும் நவீன சோதனைக் கூடக் கண்காட்சி உள்ளிட்டவை இடம் பெறுகிறது. காலை 8:30 மணி முதல் மதியம் 3:00 மணி வரை நடைபெறும். நிகழ்ச்சியை பல்கலை துணைவேந்தர் ரவி தொடங்கி வைக்கிறார். இதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இலவசமாக கலந்து கொள்ளலாம் என அறிவியற்புல முதன்மையர் ஜெ.ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.
15-Feb-2025